இலங்கை தமிழர்கள் தாய்நாடு திரும்ப கோரிக்கை


இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் மீண்டும் தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டுமென இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ கருத்து தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் வாழும் 1 லட்சம் அகதிகளில் 20 முதல் 30 சதவீதம் பேர் இந்தியாவிலேயே வசிக்க விரும்புவதாக கூறியுள்ள இவரது கூற்று வந்துள்ளது.

 

முகாம்களில் வாழும் அகதிகளை விரைவில் சந்திக்கவுள்ளதாக ஆஸ்டின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

 

சுமார் 5,000 அகதிகள் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். அகதிகள் அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என விரும்புவதாக டெல்லியில் வெளிநாட்டு பத்திரிகையாளர் சங்கத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

அரசியல் நோக்கத்துக்காக அகதிகளை இந்தியாவிலேயே வைத்திருக்க முயற்சிகள் நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

 

அகதிகளை திருப்பி அனுப்பும் இந்திய அரசின் கடந்தகால முடிவுக்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து வந்தார். திராவிட முன்னேற்ற கழகமும் அவ்வாறான முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Add new comment

7 + 11 =