இலங்கையில் மனித உரிமைகளுக்கு போராடிய அருட்தந்தைக்கு மறைவு


1983 முதல் 2009ம் ஆண்டு இலங்கையில் நிகழந்த இனப் போராட்டத்தின்போது, ஆயிரக்கணக்கான ஆள் கடத்தல்களையும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களையும், பிற மனித உரிமை மீறல்களையும் ஆவணப்படுத்திய அமெரிக்கரான இயேசு சபை அருட்தந்தை பென்ஜமின் ஹென்றி மில்லர், தன்னுடைய 93வது வயதில் ஜனவரி முதல் நாள் காலமானார்.

 

இலங்கை தேசிய அமைதி பேரவையால் 2014ம் ஆண்டு குடிமக்கள் அமைதி விருது அருட்தந்தை மில்லருக்கு வழங்கப்பட்டது.

 

இலங்கை தீவு நாட்டின் கிழக்கில் அமைந்துள்ள முக்கிய நகரான மட்டகளப்பில் உள்ள புனித மைக்கேல் கல்லுரியில் அவர் வாழ்ந்து வந்த அறையில் அவர் இறந்தார்.

 

மட்டகளப்பில் நிகழந்த கட்டய இடம்பெயர்வு, இனவாத மோதல், ஆள்கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகள், கொலைகள், கைதுகள், போர் வீரார்களாக குழந்தைகளுக்கு பயிற்சி, பாலியல் வல்லுறவுகள் ஆகியவற்றை அருட்தந்தை மில்லர் ஆவணப்படுத்தியுள்ளார்.

 

இறப்புக்கு முன்னர் பல ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமான நோயால் அவதிப்பட்டு வந்த இந்த அருட்தந்தை மருத்துவ சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

 

அருட்தந்தை மில்லர் இலங்கைக்கு வந்து, இலங்கை மக்களின் துன்பங்களை தன்னுடையதாக்கி வாழ்ந்தது பிறருக்கு தூண்டுதல் அளிப்பதாக உள்ளது என்று இலங்கை தேசிய அமைதி பேரவையின் செயல் இயக்குநர் முனைவர் ஜிஹான் பெராரா தெரிவித்துள்ளார்.

 

மக்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர்களை விட்டு அகன்று விடாமல் இந்த அருட்தந்தை அர்பணத்தோடு வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

 

இலங்கை படைப்பிரிவுகள், தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் பிற தீவிரவாத குழுக்களால் நடத்தப்பட்ட மனித உரிமைகள் மீறல்களால் பாதிக்கப்பட்டோரை அருட்தந்தை மில்லர் தைரியமாக பாதுகாத்தார் என்று பெராரா தெரிவித்தார்.

 

இறுதியாக எட்டப்பட்ட போர் நிறுத்தத்தை கண்காணிப்பதிலும் அவர் பெரும் பங்காற்றினார்.

 

பிரிட்டனிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைவதற்கு 8 மாதங்களுக்கு முன்னர்தான் அருட்தந்தை மில்லர் இலங்கையின் இயேசு சபையின் மாணவராக கல்வி பயில 1948ம் ஆண்டு அமெரிக்கா சென்றார்.

 

இயற்பியல், வரலாறு, ஆங்கிலம் மற்றும் புனித மைக்கேல் கல்லூரியில் கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றியுள்ள மில்லர், இந்த கல்லூரியின் தலைவரான 1959 முதல் 1970ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

 

அமெரிக்கரான அருட்தந்தை மில்லர் உள்ளூர் தமிழ் மொழியை கற்றுக்கொண்டு மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பணியாற்றினார்.

 

மட்டக்களப்பு அமைதி குழுவையும்,அமைதி முயற்சிகளை முன்னெடுத்த மட்டகளப்பு மதப் பேரவையையும் நிறுவியவரில் ஒருவர் அருட்தந்தை மில்லர் ஆவார்.

 

நோய் தடுப்பு விழிப்புணர்வு மூலம் இலங்கையில் காசநோய் மற்றும் பிற நோய் தடுப்புக்கு வித்திட்டவர் அருட்தந்தை மில்லர் என்று தேசிய அமைதி பேரவை தெரிவித்துள்ளது.    

Add new comment

3 + 2 =