இறைசமூகம் பாடும் திருஇசை பற்றி திருத்தந்தை அறிவுரை


தேவாலய இசைக்குழுக்கள், இறை சமூகம் திருஇசையை பாட உதவ வேண்டும். இறை சமூகம் பாட வேண்டிய திருஇசையை பாடுகின்ற குழுவாக மாறிவிடக் கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

 

புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் நடைபெற்ற 3வது சர்வதேச இசைக்குழுக்களின் கூட்டத்தில் பங்கேற்றவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட இசைக்கலை படைப்புக்களை திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டியுள்ளார்.

 

தேவாலய பாடகற்குழுக்களின் இசையும், பாடல்களும், மக்களின் உள்ளங்களை தொடுகின்ற இறைவார்த்தைக்கு சாட்சியம் பகர்கின்ற திருஇசை மறைபரப்பின் கருவியாக உண்மையாகவே உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

திருவட்சாதன கொண்டாட்ங்களுக்கு குறிப்பாக, திருப்பலி கொண்டாட்டத்திற்கு உதவுகின்ற திருஇசை, விண்ணகத்தின் அழகை பார்க்க அனுமதிக்கிறது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

 

புதிய மறைபரப்பு பணி பற்றிய பரப்புரைக்கான பாப்பிறை கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 3 நாட்கள் நிகழ்வில், ஏழாயிரம் இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.

Add new comment

3 + 4 =