இறந்தோரின் வரலாற்றை பாதுகாக்கும் க்யூ ஆர் கோடு


இந்தியாவில் ஒருவர் இறந்துவிட்டால் அவரது சடலத்தை சில சடங்குகளுக்கு பிறகு எரிப்பர் அல்லது புதைப்பர்.

 

கிறிஸ்தவர்கள் இறந்தவர்களுக்கு கல்லறை கட்டி ஒவ்வோர் ஆண்டும் நினைவுநாளில் திருப்பலி நிறைவேற்றி அஞசலி செலுத்தி வருகின்றனர்.

 

இதேபோல ஐரோப்பாவிலுள்ள டென்மார்க் போன்ற சில நாடுகளில் கல்லறைகளில் க்யூ ஆர் கோடு ஒன்றை பதிக்கின்றனர்.

 

நமது ஆதார் அட்டையில் புள்ளி புள்ளியாக சதுரமான வடிவில் இருப்பதுதான் க்யூ ஆர் கோடு.

 

ஆதார் அட்டைக்கு நாம் கொடுத்த தகவல்கள் எல்லாம் அந்த கோட்டுக்குள்தான் ரகசியமாக மறைக்கப்பட்டுள்ளது.

 

அத்தகைய கோடு போன்று கல்லறையில் உள்ள மனிதரின் வாழ்நாள் குறித்த முழு தகவல்கள் அவர் உயிருடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம், அவர் வாங்கிய விருதுகள், சமூகத்தில் அவர் செய்த மாற்றங்கள், அவரது குடும்பங்கள், அவரது சாதனைகள், அவர் எப்படி உயிரிழந்தார் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய க்யூஆர் கோடு ஒன்று தயார் செய்யப்பட்டு அதை அவரது கல்லறையில் பதித்து வரும் பழக்கம் அதிகமாகி வருகிறது.

 

அதில் பதிக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடில் உள்ள தகவல்களை படிப்பதற்காக தனியாக செல்போன் ஆஃப் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

 

அதனை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் கல்லறையில் புதைக்கப்பட்டவரின் தகவல்களை படிக்கலாம்.

 

எதிர்காலத்தில் இந்த க்யூஆர் கோடு பெரிதாக பேசப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த தகவல்கள் அனைத்தும் எதிர்காலத்தில் வரலாறாக மாறலாம் என்பதால் உயிரோடு இருக்கும் போதே பலர் கியூ ஆர் கோட்டை டிசைன் செய்து வைக்கும் அளவிற்கு நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add new comment

13 + 7 =