இரு தலைவர்களின் சந்திப்பை ஜிம்பாவே திருச்சபை மத்தியஸ்தம் செய்ய கோரிக்கை


ஜிம்பாவேயிலுள்ள திருச்சபைகள் மத்தியஸ்தம் செய்வதாக இருந்தால், அந்நாட்டின் சானு பிஃஎப் கட்சியின் தலைவரோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜிம்பாவேயின் எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கத்தின் தலைவர் நெல்சன் சாமிசா கூறியுள்ளார்.

 

ஜிம்பாவே கத்தோலிக்க ஆயர்கள் பேரவையோடு இணைந்து ஜிம்பாவே திருச்சபைகளின் கவுன்சிலால் பிப்ரவரியில் 7ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய உரையாடல் வழிமுறையில் முனங்காக்வா பங்கேற்கவில்லை.

 

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக செப கூட்டத்திற்கு இந்த கவுன்சில் அழைப்புவிடுத்தது.

 

முனங்காக்வாவோடு பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்த திட்டம் ஒன்றை வழங்க வேண்டுமென திருச்சபைக்கு சாமிசா அழைப்புவிடுத்திருந்தார்.

 

திருச்சபைதான் பொருத்தமான கூட்டுநர் என்றும், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்றும் முன்னாள் தோவலய ஊழியர் சாமிசா தெரிவித்திருந்தார். .

 

இந்த பேச்சுவார்த்தை நடக்க வேண்டுமென்றால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதோடு,  தெருக்களில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களையும் திருப்ப பெற வேண்டும் என்று சாமிசா கூறியுள்ளார்.

Add new comment

5 + 13 =