இரு உறுப்பினாகள் மீது அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்திய சீரோ-மலபார் திருச்சபை


சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தம் மற்றும் ஆயர் ஒருவருக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு பற்றிய கூற்றுகளுக்கு இரண்டு பொதுநிலையினர் மீது அவதிப்பு குற்றச்சாட்டை இந்திய சிரோ-மலபார் திருச்சபை சுமத்தியுள்ளது.

 

திருச்சபை மற்றும் அதனுடைய தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் விதமாக சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை பதிவிடுவதாக கேரள மாநிலத்தின் இந்த கிழக்கு வழிபாட்டு முறை திருச்சபையின் உயரிய முடிவு எடுக்கும் அமைப்பானது அவமதிப்பு நோட்டீஸை வழங்கியுள்ளது.

 

திருச்சபையில் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும் என்று ஜனவரி மாதம் வெளியான சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பேரவையின் முடிவை தொடர்ந்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.

 

திருச்சபையையும், அதன் தலைவர்களையும் கேவலப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பொது அறிவிப்புகள் மற்றும் போலிச் செய்திகளை வெளியிடுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

 

வெளிப்படை தன்மைக்கான உயர் மறைமாவட்ட இயக்கம் என்று அழைக்கப்படும் நிறுவனத்தை சேர்ந்த ரிஜூ கான்ஜூகாரன் மற்றும் ஷைஜூ ஆன்றனிக்கு இந்த நோட்டிஸ் வழங்கப்பட்டு்ளளது.

 

 

சமூக ஊடகங்களில் வெளியான அவமதிப்பு பதிவுகளும், கூற்றுக்களும், 40 லட்சம் கத்தோலிக்கர்களை கொண்டுள்ள திருசசபையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்த வாரம் வெளியான நோட்டிஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கு இழப்பீடு வழங்கும் வகையில் ஒவ்வொருவரும் தலா ஒரு கோடி ரூபாய்  அளிக்க வேண்டும் என்றும் இந்த நோட்டீஸில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நோட்டிஸை ஜனவரி 29ம் தேதி பெற்றுக்கொண்டதாகவும், ஒரு வாரத்திற்குள் தகுந்த பதில் அளிக்கப்பட்டுள்ளதாவும் ஆன்றனி தெரிவித்திருக்கிறார்

Add new comment

7 + 6 =