இயேசு சபை அருட்தந்தை அர்ருபைன் புனிதர் பட்ட விவாதம் தொடக்கம்


இயேசு சபை அருட்தந்தை அர்ருபைக்கு புனிதர் பட்டம் கொடுப்பது தொடர்பான விவாதங்கள் ரோமில் தொடங்கியுள்ளது.

 

இவரது இறப்பின் 28வது ஆண்டு நிறைவையொட்டி பிப்ரவரி 5ம் தேதி புனித ஜான் லான்ரன் பசிலிக்காவில் இந்த வாதம் தொடங்கியது.

 

1965ம் ஆண்டிலிருந்து 1983ம் ஆண்டு வரை இயேசு சபையின் உலக தலைவராக இருந்த அருட்தந்தை அர்ருபிக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டுமென ரோம் மறைமவட்டம் விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது.

 

நீண்டகாலமாக நோயால் துன்பப்பட்டு 1991ம் ஆண்டு முன்னாள் உலக தலைவர் ரோமில் தான் காலமானார்.

 

இந்த அருட்தந்தையின் எழுத்துக்களை சேமித்தல், அவரது வாழ்க்கை மற்றும் புனிதம் பற்றிய சாட்சியங்களை சேகரித்தல் ஆகியவை புனிதர் பட்ட நடைமுறையின் தொடக்கமாக வருகின்றன.

 

மறைமாவட்டத்தில் இருந்து வேண்டுகோள் வத்திக்கானில் புனிதர்களுக்கு புனிதர் பட்டம் கொடுப்பதற்கான பேராயத்திற்கு முதலில் அனுப்பப்படும்.

 

திரட்டப்படும் தகவல்களில், அவர் கிறிஸ்தவ மதிப்பீடுகளோடு வீரதீர வாழ்க்கை வாழ்ந்து, இறைவனுக்கு சா்ட்சியம் பகர்ந்திருந்தால் அவரை வணக்கத்திற்குரியர் நிலைக்கு வத்திக்கான் உயர்த்தும்.

 

அடுத்ததாக நிகழும் அற்புதங்களை பொறுத்து அருளாளர் என்ற பட்டமும், கடைசியில் புனிதர் பட்டமும் வழங்க்பபடுகிறது.  

Add new comment

3 + 2 =