இயேசு கிறிஸ்துவோடு பாரிக்கரை ஒப்பிட்டு பேசிய கோவா அமைச்சர்


கோவா முதலமைச்சரை இயேசு கிறிஸ்துவோடு ஒப்பிட்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

என்னுடைய பேச்சால் யாராவது புண்பட்டிருந்தால், அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும்.

 

ஆனால், என்னுடைய பேச்சை காங்கிரஸ் கட்சியினர்தான் திரித்து வெளியிட்டுள்ளார் என்று கோவா மாநில விவசாய அமைச்சர் விஜய் சார்தேசாய் தெரிவித்திருக்கிறார்.

 

இயேசு கிறிஸ்துவை குறிப்பிட்டு உருவகப்படுத்துவதே தனது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

காங்கிரஸ்தான் கூறிய கருத்தை திரித்துக்கூறி மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இயேசு கிறிஸ்து உறவு பாலங்களை அமைத்ததுபோல, மனோகர் பாரிக்கரும் செய்துள்ளதாகவே தான் குறிப்பிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Add new comment

2 + 6 =