இயேசுவோடு தனிப்பட்ட உறவுதான் இறைநம்பிக்கை – திருத்தந்தை


இறைநம்பிக்கை என்பது கருத்தியல் அல்ல. அன்பை காட்டும் செயல்பாடுகளுக்கு இட்டுசெல்லும் இயேசுவோடுள்ள ஓர் உறவு என்று திருத்த்நதை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

டோமுஸ் சாந்தா மார்த்தே சிற்றாலத்தில் நிறைவேற்றிய திரு்பபலியின்போது, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்பது உறுதியான இறைநம்பிக்கையை கொண்டாடுவதாகும் என்று அவர் கூறியுள்ளார்.

 

மனித உடல் எடுத்து வந்த கடவுளின் மகன் நம்மோடு ஒருவரானார் என்ற நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

 

மரியாளின் வயிற்றில் கருத்தரித்து, பெத்லேகமில் பிறந்து, ஒரு குழந்தை வளர்வதுபோல வளர்ந்து, எகிப்திற்கு தப்பியோடி, நாசரேத்திற்கு திரும்பி வந்து, தந்தையோடு வாசிக்கவும், வேலை செய்யவும் பழகினார். கடவுளாக இருந்தும், உண்மையிலே மனிதராகவும் இருந்தார்.

 

இறைநம்பி்க்கையில் உறுதியாக இருப்பது சவால் மிக்கதாகும். கருத்தியலோ, அழகான வார்த்தைகளோடு அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

Add new comment

12 + 3 =