இயேசுவை பின்தொடர்தல் அன்றாடம் நமது தெரிவு – திருத்தந்தை


கடவுளை நமது வாழ்க்கையில் பின்தொடர்தல் என்பது வாழ்வில் ஒருமுறை கிடைக்கின்ற வாய்ப்பு அல்ல.

 

ஆனால், இது ஒவ்வொரு நாளும் நாம் எடுக்க வேண்டிய தீர்மானம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

 

அவ்வப்போது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் நிகழும் நடைமுறை நிகழ்வுகளில் கிறிஸ்தவர்கள் இயேசுவை சந்திக்கின்றனர் என்று திருத்தந்தை மறையுரையில் கூறியுள்ளார்.

 

எல்லாவற்றுக்கும் மையமாக, இதயம் துடிக்கின்ற இயேசுவை நமது வாழ்வின் கடவுளாக வரவேற்கும்போது. அவர் நம்மில் வந்து உறைகிறார் என்று தூய பேதுரு பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றியபோது திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

பிறந்து 40 நாளுக்கு பிறகு இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் திருநாள் திருப்பலி நிறைவேற்றுகையில், திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Add new comment

1 + 15 =