இந்தோனீஷிய விருது பெற்றுள்ள வெளிநாட்டவர்கள்


இத்தாலி பொதுநிலை பெண் ஒருவரும், நெதாலாந்தில் பிறந்த அருட்தந்தை ஒருவரும் இந்த ஆண்டு இந்தோனீஷிய கலாசார விருதுகள் பெறுவோரில் அடங்குகின்றனர்.

 

இந்தோனீஷிய நாட்டின் பண்புகளை உறுதிபெற செய்வதற்கு ஆற்றிய பங்களிப்புக்கு அரசு வழங்குகின்ற அங்கீகாரமாக இந்த விருது பார்க்கப்படுகிறது.

 

சான்ட்இகிடியோ சபையை சேர்ந்த வலேரியா மர்டானோவும், 1971ம் ஆண்டு முதல் வட சுமத்திரா மாகாணத்தில் வாழ்ந்து வரும் கப்பூச்சியன் சபையை சேர்ந்த ஓய்வுபெற்ற அருட்தந்தை லியனார்டோஸ் இகிடியஸ் ஜூஸ்டன் கின்டிங் சுகாவும் இந்தோனீஷியாவின் கல்வி மற்றும் கலாசார அமைச்சகத்திடம் இருந்து ஜகார்த்தாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த விருதை பெற்று கொண்டனர்.

 

1990ம் ஆண்டு முதல் இந்தோனீஷியாவில் பல்சமய உரையாடலை வளர்த்து வருவதற்காக 62 வயதான மர்டானோவுக்கு இந்த விருது வழங்க்பபட்டுள்ளது.

 

வட சுமத்திராவில் வாழும் படாக் தோபா மற்றும் படாக் காரோ பழங்குடியின மக்களின் கலாசாரங்களை பாதுகாக்க உதவியதற்காக 76 வயதான அருட்தந்தை ஜூஸ்டன் இந்த விருதை பெற்றுள்ளார்.

 

அவாகளின் சலாசாரத்தை வெளிகாட்ட அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டுள்ளன.

Add new comment

9 + 3 =