இந்தோனீஷிய கிறிஸ்தவ அரசியல்வாதி மீது தெய்வநிந்தனை குற்றச்சாட்டு


பிரபல கிறிஸ்தவ அரசியல்வாதி மீது தெய்வநிந்தனை குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தோனீஷிய சமூகங்களில் புரையோடி கிடக்கும் ஷாரியா மற்றும் நற்செய்தி அடிப்படையிலான சட்டங்களுக்கு எதிராக பேசுவதால் பழமைவாத சக்திகள் தன்னை இலககு வைப்பதாக 36 வயதான கிரேஸ் நடாலியே கூறியுள்ளார்.

 

இந்தோனீஷிய ஒற்றுமை கட்சியை நிறுவிய சீாதிருத்த சபையை சோர்ந்த கிரேஸ் நடாலியேக்கு எதிராக நவம்பர் 16ம் தேதி பிற்போக்குவாத முஸ்லிம் கட்சி ஒன்று புகார் அளித்து்ளளது.

 

சூதாட்டம், மது அருந்துவது, எதிர்பாலினத்தவரோடு பழகுவது ஆகிய சட்டங்களை விமர்சித்து ஜகார்த்தாவின் அருகிலுள்ள தாங்யராங்கில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக இவர் மீது தெய்வநிந்தனை குற்றச்சாட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்தோனீஷிய ஒற்றுமை கட்சி இந்நாட்டில் நடைபெறும் அநீதி, பாகுபாடு மற்றும் பொறுக்க முடியாத அனைத்து செயல்பாடுகளையும் தடுக்கும். இந்தோனீஷிய ஒற்றுமை கட்சி நற்செய்தி மற்றும் ஷாரியா சட்டங்களுக்கு ஆதரவு அளிக்காது என்று அவர் இந்த கூட்டத்தில் பேசியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

 

இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் முன்னாள் தொலைக்காட்சி பத்திரிகையாளரான கிரேஸ் நடாலியே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, மத அடிப்படையிலான சட்டங்கள் பெண்களை பாதிக்கின்றன என்றும், இத்தகைய சட்டங்களை விமர்சனம் செய்வதால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து்ள்ளார்.

 

வியட்நாமின் 13 மாவட்டங்களில் 421 பாகுபாட்டு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பெண்களுக்கு எதிராக வன்முறை பற்றிய தேசிய ஆணையம் கூறியுள்ளது.

 

பைபிள் அடிப்படையிலான சட்டத்தை கொண்டுள்ளதால், மது மற்றும் சூதாட்டத்தை தடை செய்துள்ள பாவுவாவிலுள்ள மனோக்வாரி மாவட்டம் உள்பட இத்தகைய சட்டங்கள் நடைமுறையாகி வருகின்றன.

 

சுமத்திராவிலுள்ள அச்சே மாகாணம் ஷாரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

 

இந்த விதிகளை மீறுகின்ற பலரும், குறிப்பாக பெண்கள் பிரம்படி தண்டனை பெறுகிறார்கள்.

 

கிரேஸ் நடாலியேவின் பேச்சு திருக்குரானுக்கு எதிரானது என்று இந்த புகார் அளித்துள்ள இந்தோனீஷிய முஸ்லிம் தொழிலாளர்களின் சகோதரத்துவ பிற்போக்குவாத குழு தெரிவித்துள்ளது.

 

இவருடைய கருத்துக்கள் இஸ்லாமுக்கு எதிரானதாக கருதப்படுகிறது என்றும், மதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு என்றும் இந்த குழுவின் வழக்கறிஞர் எக்கி சுட்ஜானா கருத்து தெரிவித்துள்ளார்.

Add new comment

2 + 1 =