இந்தோனீசிய விமான விபத்து – கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு


இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் இந்த விபத்து நிகழ்ததற்கான காரணம் விரைவில் தெரியவரும் என்று தெரிகிறது.

 

லயன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இந்த போயிங் விமானம் கடலில் விழுந்து மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.

 

ஜகார்த்தாவிற்கு அருகில் இந்தியப் பெருங்கடல் பகுதியின் வடகடலில் உள்ள தன்ஜுங் பிரியோக் என்ற இடத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

கருப்புப் பெட்டியைக் கைப்பற்றிய ஆழ்கடல் முக்குளிப்பு வீரர் மண்ணுக்கடியில் புதைந்திருந்ததை ஆரஞ்சு நிற கறுப்பு பெட்டியை தோண்டியெடுத்துக் கண்டுபிடித்துள்ளதாக தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Add new comment

12 + 4 =