இந்தோனீசிய தங்கச் சுரங்க மீட்பு பணி நிறைவு


இந்தோனேசியாவின் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் உடல்களைத் தேடும் பணி நிறைவடைந்தள்ளதாக தேசிய பேரழிவு மீட்புப் பணி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சுரங்கத்தில் சிக்கியோரை மீட்க நடைபெற்ற மீட்பு பணியில் 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், மேலும் பல உடல்கள் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

ஜகார்தாவிலிருந்து வெகுதொலைவில் உள்ள வடக்கு சுலாவெஸியில் பூலாங் மங்கொண்டா மாவட்டத்தில் இந்த தங்கச் சுரங்கம் அரசின் அனுமதியின்றி நடைபெற்று வந்துள்ளது.

 

பிப்ரவரி 26ம் தேதி இந்த தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டபோது அதற்குள்ளே 100 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

Add new comment

1 + 3 =