இந்தோனீசிய கிறிஸ்தவ ஒன்றிப்பு செபங்களை ஆக்கிரமித்த அமைதியான தேர்தல்


ஜனவரி 25ம் தேதி நிறைவு பெறுகின்ற சர்வதேச கிறி்ஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தை கடைபிடித்து வரும்போது, இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் அமைதியாக நடைபெற வேண்டுமென இந்தோனீசிய கிறிஸ்தவர்கள் செபித்துள்ளனர்.

 

இதற்கான செபங்களை எழுதிக்கொண்ட இந்தோனீசிய கிறிஸ்தவர்கள், “நீதி மற்றும் நீதி மட்டுமே நீங்கள் தேடுவீர்கள்” என்ற மைய கருத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

இது பற்றி கருத்து தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், போட்டி மனப்பான்மையால், பலரை ஏழ்மையில் தள்ளியும், சிலரை மேலும் பணக்காரர்கள் ஆக்கியும் வரும் தங்களது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பற்றி இந்தோனீசிய கிறிஸ்தவர்கள் அதிக கவலை அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

 

இத்தகைய நிலைமை வித்தியாசமான இனக்குழுக்கள், மொழிகள் மற்றும் மதங்கள் ஒன்றாக இணைந்து வாழ்கின்ற ஒருவொருக்கு ஒருவர் பொறுப்புணர்வை பகிர்ந்து கொள்கின்ற ஒரு சமூகத்தின் இணைக்க வாழ்வை ஆபத்திற்குள்ளாக்குகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

 

பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு கிறிஸ்தவ திருச்சபைகளுக்குள் ஒன்றுமையை உருவாக்குவது கத்தோலிக்க மத குருக்களின் கடமையாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Add new comment

8 + 10 =