இந்தோனீசியா: உதவி தொகையை அபகரித்த அதிகாரிகள் கைது


மேற்கு நியுசா டெங்காராவில் மத விவகார அமைச்சக அதிகாரிகள் 3 பேரை இந்தோனீசிய காவல்துறை கைது செய்துள்ளது.

 

கடந்த ஆண்டு நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பின்னர், சேதமாகிய 58 மசூதிகளை பழுதுபார்க்க வழங்கப்பட்ட நிதிகளில் இருந்து கையூட்டு கோரியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

 

இந்த நிலநடுக்கத்தில் 563 பேர் உயிரிழந்தனர். 630 மசூதிகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமாகின.

 

அதிகாரிகளின் முதல் எழுத்துக்களால் மட்டுமே அறியப்படும் எஸ்எல், பிஏ மற்றும் ஐகே ஆகியோர், இந்த பழுதுநீக்க வழங்கபபட்ட தொகையில், 4 லட்சத்து 26 ஆயிரம் டாலரில் 20 சதவீதம் தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமென கோரியதாக இனம்காணப்பட்டுள்ளனர்.

 

4 மசூதிகளை பழுதுபார்க்க வழங்கப்பட்டதில் 7 ஆயிரத்து 455 டாலர் அவர்கள் கைது செய்யப்பட்டபோது எடுத்திருந்தனர்

 

அவர்கள் கையும், களவுமாக பிடிபட்டுள்ளதாக மடாராம் காவல்துறை தலைவர் சாய்ஃபுல் அலாம் கூறியுள்ளார்.

Add new comment

14 + 1 =