இந்தோனீசியாவில் 6.6 அளவிலான கடும் நிலநடுக்கம்


இந்தோனீசியாவில் 6.6 ஆகப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.

 

இந்தோனேசியாவில் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மோலுக்கா தீவில் உள்ள டெர்னேண்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

 

தொடர்ந்து அடுத்தடுத்து 5.0, 5.1 என்ற அளவில்  நில அதிர்வுகளும் ஏறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஆனால், சுனாமி பேரலை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

 

உயிரிழப்பு மற்றும் இதர அழிவுகள் பற்றிய செய்திகள் இதுவரை இல்லை என்று இந்தோனேசிய தேசியப் பேரிடர் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Add new comment

1 + 4 =