இந்தோனீசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது.

 

இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியிலுளள சும்பாவா தீவுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ரிகடர் அளவுகோலில் 6.1ஆக பதிவான நிலநடுக்கம் நிகழந்தது.

 

இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுமில்லை

 

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவலக்ளும் இதுவரை வெளிவரவில்லை.

 

கடந்த டிசம்பர் மாதம் இந்தோனேசிய கடலடியில் அனாக் கிராக்கதோவ் எரிமலை வெடித்து லாவா குழம்பு கடல் நீருடன் கலந்ததில் சுனாமி ராட்சத அலைகள் தாக்கியது. அதில் 400க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Add new comment

8 + 1 =