இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவி விலகல்


ரிசர்வ் வங்கிக்கு அரசுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்ந்து வந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

தன்னுடைய தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார்.

 

டாக்டர் உர்ஜித் படேலின் ராஜினாமா நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு என இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில், ரிசர்வ் வங்கியைக் காப்பாற்றுவதற்காகு உர்ஜித் படேல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு எல்லா தரப்பினரும் ஆதரவு தெரிவிப்பது பெருமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

ஆனால், நடுவண் அரசின் நெருக்கடி தாங்க முடியாமல் இவர் பதவி விலகியிருக்கலாம் என்று விமர்சகர்கள் தெரிவிக்கினறனர்.

Add new comment

1 + 0 =