Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இந்திய பொருளாதாரத்தை பாதிக்க செய்ய, பாதுகாப்புவாதத்தை கையிலெடுக்கும் டிரம்ப்
அமெரிக்க அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இந்தியாவை பழிவாங்க, பாதுகாப்புவாதத்தை அமெரிக்க அதிபர் கையில் எடுத்துள்ளார்.
முன்னுரிமைகளின் பொது அமைப்புகளுக்கான முதன்மை வர்த்தக கொள்கையில் இருந்து இந்தியாவை நீக்கிவிட அமெரிக்கா முயலுகிறது.
இந்த சலுகையின் கீழ் இந்தியாவின் 1930 பொருட்களுக்கு இறக்குமதி வரி செலுத்துவதில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்து வருகிறது.
இந்த திட்டம் வளர்முக நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை வளர்த்து கொள்ளுவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
1970-களில் இருந்து இந்த திட்டத்தால் பயனடையும் பெரிய நாடு இந்தியாவாகும்.
தங்களின் ஏற்றுமதி பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறும் அமெரிககா, அமெரிக்க பொருட்கள் சுதந்திரமாக இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட ஆவனச் செய்ய கோரியுள்ளது.
அமெரிக்க மருத்துவ கருவிகளுக்கு நிலவுகின்ற விலை இடைவெளியை குறைக்கவும், தகவல் தொழில்நுட்ப பொருக்களின் வரியை குறைக்கவும் அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்க விவசாய பொருட்கள் இந்தியாவில் விற்பதையும் அமெரிக்கா விரும்புகிறது.
ஆனால், இதற்கு முறையாக பதில் அமெரிக்காவுக்கு இதுவரை கிடைக்காததால், இப்போது இந்தியா வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படும் 1930 பொருட்களை இந்த சலுகை பட்டியலில் இருந்து நீக்கிவிட டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சலுகை பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கப்பட்டால், 190 மில்லியன் டாலர் பாதிப்பை இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
வால்மார்ட் மற்றும் அமேசான் போன்ந அமெரிக்க நிறுவனங்களை பாதித்த இந்தியாவின் இ-வணிக கொள்கை, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சேகரிக்கும் தரவுகளை இந்தியாவுக்குள்ளேயே சேமித்து வைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஆகியவை அமெரிக்க அரசை கோபப்பட செய்துள்ளது.
டிரம்ப் மிரட்டியது நடைமுறையானால் இந்தியாவின் நிறுவன, கடல், கைவினைப் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களுக்கு வரி கட்ட வேண்டிவரும்.
மெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 5.6 பில்லியன் மதிப்புடைய இந்திய இறக்குமதி பெருட்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம்.
பொருட்களின் விலை உயர்வதோடு, வேலைவாய்ப்பிலும் சிக்கல்கள் உருவாகும்.
நமது நிறுவனங்கள் பிற நாடுகளின் நிறுவனங்களோடு போட்டி போடுவதில் பெரும் பாதிப்பு உருவாகும். வாடிக்கையாளாகளும் பாதிக்கப்படுவர்.
இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கிய இடம் வகிக்கும் ரசாயன பொருட்கள் மீதான வரி, ரசாயன பொருட்களின் விலையை ஐந்து சதவீதம் அதிகரிக்கும் ஆபத்தும் நிலவுகிறது
Add new comment