இந்திய படையினர் மீதான கோழைத்தனமான தாக்குதலை கண்டித்த ஆயர்


இந்திய பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த மோதல் போக்கு முடிவுக்கு வர வேண்டுமென இந்திய கத்தோலிக்கர்கள் செபித்து வருகின்றனர்.

 

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலை தாக்குதல்தாரி ஒருவர் கார் குண்டை வெடிக்க செய்து 40 பாதுகாப்பு படையினரை கொலை செய்த பிப்ரவரி 14ம் நாளுக்கு பின்னர், அணு ஆயுதங்களை கொண்டுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

டஜன்கணக்கானோர் காயமடைந்த இந்த புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவியதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.

 

கா்ஷ்மீரை எல்லையாக கொண்ட ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்ட ஆயர் இவான் பெரேரா, இந்திய பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கோழைத்தனமானது என்று கண்டித்துள்ளார்.

 

இறந்தோருக்காகவும், மாநிலத்தில் அமைதி திரும்பவும் செபிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கின்ற காஷ்மீர் மக்கள் தாங்கள் பழிவாங்கப்படலாம் என்ற எண்ணத்தில் ஆபத்துக்களை கண்டு அஞ்சியிருப்பதாக வந்துள்ள தகவல்களுக்கு மத்தியில், அனைவரும் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருந்து, மத சகிப்புதன்மையை வெளிக்காட்ட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

நாம் அனைவரும் ஒற்றுடையுடன் இருக்க வேண்டும். மதம் மற்றும் இறைநம்பிக்கையின் அடிப்படையில் யாரும் நம்மை பிரிக்க அனுமதிக்கக்கூடாது. தீங்கை எற்படுத்தும் குற்றவாளிகளின் திட்ட வரைவை தோல்வியுற செய்ய வேண்டுமென ஆயர் பெரேரா தெரிவித்து்ளளார்.

 

பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் மெழுகுவர்த்திகள் ஏற்றி இரவு விழிப்பு நடத்தி கிறிஸ்தவர்கள் பதிலளித்து்ளளனர்.

Add new comment

2 + 4 =