இந்திய தேர்தலை சிறுபான்மையினரின் வாயப்பாக பார்க்கும் ஆயர்கள்


உலகிலேயே மிகவும் பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஆறு வாரங்களாக மக்களவை தேர்தலை நடத்த இருக்கையில், சிறுபான்மை குழுக்களின் உரிமைகளில் கிறிஸ்தவ தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்திற்கும், குறிப்பாக சிறுபான்மை குழுக்களுக்கு இந்த மக்களவை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய போகிறது என்று இந்திய ஆயர்கள் பேரவையின் செய்தி தொடர்பாளர் தியோடோர் மஸ்காரன்ஹாஸ் கூறியுள்ளார்.   

 

ஜனநாயக அமைப்பில் தேர்தல்கள் நடைபெறும் ஒவ்வொரு தருணமும், ஒடுக்கப்பட்ட, பிரநிதிநிதித்துவம் இல்லாத வகுப்பினர் தங்களின் குரலை கேட்க செய்யும் தருணமாக அமைகிறது. அதனால்தான் இதுவொரு முக்கியமான தருணம் என்று அவர் கூறியுள்ளார்,

 

ஏழு கட்டங்களாக நடைபெறும் 2019 மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19ம் தேதி நிறைவடைகிறது. வாக்குப்பதிவு செய்ய தகுதியுடைய 900 மில்லியன் பேர் இந்திய நாடாளுமன்றத்திற்கு 543 உறுப்பினரை தேர்வு செய்ய இருக்கின்றனர்.

 

தற்போது ஆளும் இந்து ஆதரவு பாரதிய ஜனதா கட்சியின் பதவிகாலம் மே மாதம் 26ம் தேதியோடு நிறைவடைகிறது.

Add new comment

1 + 3 =