இந்திய கத்தோலிக்க துறவியர் வருமானவரி செலுத்த ஆணை


அரசு உதவி பெறுகின்ற கல்வி நிலையங்களில் இருந்து ஊதியம் பெறவதாக இருந்தால் அருட்தந்தையரும், அருட்சகோதரிகளும் வருமான வரி செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் விதித்துள்ள ஆணையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தமிழக திருச்சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ள மத இல்லங்கள் அல்லது மறைமாவட்டத்திற்கு தங்களின் ஊதியங்களை நன்கொடையாக அளிப்பதால், கத்தோலிக்க அருட்தந்தையரும், அருட்சகோதரிகளும், அருட்சகோதரிகளும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

 

ஆனால், அரசு தற்போது விடுத்திருக்கும் ஆணை பெரிய பின்னடைவு. இந்த ஆணையை அகற்ற சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுப்போம் என்று தமிழ்நாடு ஆயர்கள் கவுன்சிலின் துணை பொதுச் செயலாளர் அருட்தந்தை எல். செல்வராஜ் கூறினார்.

 

ஆனால், தனிநபரால் பெற்றுக்கொள்ள கூடிய ஊதியமாக அவரது வருவாயாக வருமானமாக வரி செலுத்தியாக வேண்டும். அவர்களின் தெரிவுகள் வரி விலக்கிற்குரியதாக மாறிவிடாது என்று உயர் நீதிமன்ற ஆணை தெரிவிக்கிறது.

 

2015ம் ஆண்டு அரசு உதவி பெறுகின்ற கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஊதியம் பெறுகின்ற அருட்தந்தையர். அருட்சகோதராகள் மற்றும் அருட்சகோதரிகள் அனைவரும் வரி செலுத்த வேண்டியவர்கள் என மாநில அரசு வருமான வரித்துறை ஆணையிட்டது.  

 

உயர் நீதிமன்றத்தில் இந்த ஆணை தள்ளுபடி செய்யப்பட்டது என்று அருட்தந்தை செல்வராஜ் தெரிவித்தார்.

 

ஏழ்மை வார்த்தைபாடு எடுத்துள்ள அருட்தந்தையரும், அருட்சகோதரிகளும் தங்களின் வருவாயை திருச்சபையிடம் வழங்கிவிடுவதால், வரி செலுத்த வேண்டியதில்லை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

 

மேல்முறையீட்டில் நீதிமன்றம் வரி செலுத்த வேண்டும் என்று மீண்டும் தெரிவித்துள்ளது.

Add new comment

17 + 0 =