இந்திய எஞ்சின் இல்லாத ரயில் வெள்ளோட்டம்


இன்ஜின் இல்லாத ‘தொடர்வண்டி 18’ ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்தின்போது, பயணம் செய்திருக்கிறது.

 

இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன் மாதிரியாக இது கருதப்படுகிறது.

 

இந்தியாவில் அதிவேக ரயில்கள் உருவாக்கும் முயற்சியின் ஒருபகுதியாக சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரக ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் 100 கோடி ரூபாய் செலவில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது.

 

‘வைபை’ வசதி, ஜிபிஎஸ் தகவல், ‘டச் பிரீ’ பயோ டாய்லெட், எல்இடி லைட்டுகள், பயணத்தின்போது ஏசியின் அளவை கூட்டி, குறைத்துக்கொள்ளும் வசதி என பல நாடுகளில் உள்ளது போன்ற வசதிகள் இந்த ரயிலில் செய்யப்பட்டுள்ளன.

 

Add new comment

6 + 1 =