இந்திய அருட்சகோதரிக்கு புனிதர் பட்டம் கொடுக்க பரிந்துரை


ஆசீர்வதிக்கப்பட்ட மரியம் தெரிசியா சிராமெலுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் ஒப்புக்கொண்ட நிலையில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்த இன்னொரு புதிய புனிதர் நாட்டுக்கு கிடைக்கவுள்ளார்.

 

இந்த அருட்சகோதரியிடம் கேட்டுக்கொண்டதால் நிகழ்ந்த அற்புதத்தை ஏற்றுக்கொண்டு ஆணையாக வெளியிட புனிதர்களுக்கான விவகாரங்களை கையாளும் பேரவையில் திருத்த்நதை பிரான்சிஸ் அனுமதித்தர் பற்றி அறிவிப்பு பிப்ரவரி 13ம் தேதி வெளியானது.  

 

இந்த அற்புதத்தை ஏற்றுக்கொள்வதுதான் இந்த அருட்சகோதரிக்கு புனிதை பட்டம் வழங்குவதற்கான கடைசி நிலையாகும் என்று கேரளா மாநிலத்தின் திருக்குடும்ப அருட்சகோதரிகள் சபையை சோந்த தலைவி அருட்சகோதரி பென்னேலிபரம்பில் உதயா தெரிவித்துள்ளார்.

 

இந்திய திருச்சபை மற்றும் அதனுடைய ஆன்மிகத்திற்கு உலக அளவில் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் தியோடர் மஸ்கரன்காஸ் கூறியுள்ளார்.

Add new comment

4 + 13 =