இந்தியா பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்க வேண்டுகோள்


இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் செயல்படுத்தி வருகின்ற அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். எல்லையில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் அனுப்பி உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ராணுவ நடவடிக்கையை இந்த நாடுகள் தொடருமானால் அது தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும். இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷியும் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்க செயலாளர் மைக் பாம்பேயோ கேட்டுக் கொண்டார்.

 

இதனால், ராணுவ நடவடிக்கை தொடராமல் இருக்க வழி ஏற்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Add new comment

2 + 6 =