இந்தியா, பாகிஸ்தான் கட்டுப்பாட்டுடன் செயல்பட சீனா, ஆஸ்திரேலியா அறிவுரை


பதற்றமாக இந்நேரத்தில், இந்தியாலும், பாகிஸ்தானும் கட்டு்பபாட்டுடன் இருந்து அமைதியை நிலைநிறுத்த வேண்டுமென சீனாவும், ஆஸ்திரேலியாவும் அறிவுரை கூறியுள்ளன.

 

காஷமீரிலுள்ள புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய விமானப்படை அதிரடியாக பதிலடி வழங்கியுள்ளது.

 

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த தாக்குததலுக்கு அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை காணப்படுகிறது.

 

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.

 

 “இருதரப்பும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது, பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கையை இருதரப்பும் கைவிட வேண்டும். பிரச்சினையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு இருதரப்பும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டுமென வலியுறுத்துகிறோம் என வலியுறுத்துகிறோம் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை மந்திரி மொரிசே பெய்னே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

 

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு கவலையளிப்பதாகவும் ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

 

இந்த பதற்றமான சூழலில், இரு தரப்பும் முழு கட்டுப்பாட்டுடன் அமைதி காக்க வேண்டுமென சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

Add new comment

8 + 0 =