இந்தியாவோடு நட்புறவை மேம்படுத்த பாகிஸ்தான் விருப்பம்


இந்தியாவுடன் பண்பட்ட உறவை விரும்புவதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

 

பாகிஸ்தான் ராணுவமும், அரசியல் கட்சிகளும் இந்தியாவுடன் இருக்கின்ற உறவை மேம்படுத்தி கொள்ளவே எண்ணவதாக அவர் கூறியுள்ளார்.

 

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய புனித தலத்துக்கும், இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் புனிதத்தலத்துக்கும் இடையேயான புதிய வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

 

இந்த புதிய வழித்தடத்தில் சீக்கிய யாத்திரிகர்கள் விசா இல்லாமல் இந்தப் புனிதத் தலத்துக்கு வந்து செல்லலாம்.

 

இந்த வழித்தட திறப்புவிழாவில் இம்ரான் கான் இந்த கருத்தை கூறியுள்ளார்.

 

இந்த நிகழ்வில் பஞ்சாப் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரும், காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்ஜோத் சிங் சித்துவும் கலந்து கொண்டனர்.

 

இரண்டு தரப்பிலும் தவறுகள் உள்ளன. எவ்வளவு நாட்கள்தான் ஒருவரை ஒருவர் மாறி மாறி பழி சுமத்திக் கொண்டு இருக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Add new comment

1 + 3 =