இந்தியாவில் தேடப்படும் நீரவ் மோடி லண்டனில் கைது


பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மோசடி செய்து லண்டனில் சென்று தலைமறைவான வைர வியாபாரி நீரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த நபராக வைர வியாபாரி நீரவ் மோடி கூறப்படுகிறார்.

 

ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர், இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் நகைக்கடைகளுக்கு சொந்தக்காரர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்ற கோலோச்சியவர் நீரவ் மோடி.

 

அமெரிக்க நகைக் கடையை அந்நாட்டு அதிபர் டிரம்ப் திறந்து வைக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர் நீரவ் மோடி.

 

டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாட்டில் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்து கெத்து காட்டியவர் நிரவ் மோடி.

 

நீரவ் மோடி வைர வியாபாரத்திலும், நகைக் கடைத் தொழிலிலும் அசுர வளர்ச்சி அடைவதற்கு அவரின் சகோதரர் நிஷால், மற்றும் மாமா மெகுல் சோக்ஸியும்தான் காரணம். இதில் மெகுல் சோக்ஸி கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நிரவ் மோடிக்கு குஜராத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் நகைக்கடைகளும், வைரம் பட்டை தீட்டும் நிறுவனங்களும் இப்போதும் செயல்பட்டு வருகின்றன

 

அனில் அம்பானியின் சகோதரியின் மகள் இஸ்ஹிதா சாய்கோகரை நீரவ் மோடி தனது சகோதரர் நிஷாலுக்கு மணம் முடித்து வைத்துள்ளார். இந்த திருமணம் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்தது.

 

லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கிற்கு ஆதரவை வழங்குவதாக கூறி வழங்கிய பிணை மனுவை நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மார்ச் 29ம் தேதி அவரது வழக்கும் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.

Add new comment

1 + 0 =