இந்தியாவில் தாக்கப்படும் மத சிறுபான்மையினர்


இந்தியாவிலுள்ள மத மற்றும் இன சிறுபான்மையினர் இந்து குழுக்களிடம் இருந்து வன்முறைகளை சந்தித்து வருவது தொடர்ந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

 

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி இத்தகைய இந்து மத குழுக்களை ஆதரித்து வருவதாக இந்த புதிய ஆய்வை நடத்தி வருவதாக மனித உரிமை கண்பாணிப்பு அமைப்பு தெரிவித்து்ளளது.

 

மத சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் மீது கும்பல் கொலைகள் அதிகரிப்பது தொடர்பாக விசாரணை நடததுவதற்கு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது என்று இந்த ஆய்வில் தெரிவிகக்ப்பட்டுள்ளது.

 

வெறுப்புணர்வின் குடியரசாக இந்தியாவை நரேந்திர மோடி மாற்றியுள்ளதாக சில விமர்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

2014ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசை உருவாக்கிய பின்னர் பாஜக அரசியல் கட்சி தலைவர்கள் மத சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்தது, மதவெறி கும்பல்களால் மத மோதல்களுக்கு வழிவகுத்துள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Add new comment

2 + 2 =