இந்தியாவின் புதிய நாணயங்களை வர்த்தகத்திற்கு பயன்படுத்த தடை


இந்தியாவின் புதிய நாணயங்களாக ரூ.2000, ரூ.500, ரூ.200  பணநோட்டுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த வேண்டாம் என்று நேபாள அரசு வங்கியான நேபால் ராஷ்டிரா வங்கி அறிவித்துள்ளது.

 

சுற்றுலாப் பயணிகள், வங்கிகள், வணிக ரீதியான நிறுவனங்கள் ரூ.100 மதிப்புக்கு அதிகமான இந்தியாவின் பணநோட்டுகளைப் நேபாளத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக நேபாள் ராஷ்டிர வங்கி ஞாயிற்றுக்கிழமை சுற்றறிக்கை மூலம்  அறிவித்துள்ளது.

 

காத்மாண்ட் போஸ்ட் செய்தி நிறுவனமும் இதனை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

 

இதனால், நேபாளத்துக்குச் சுற்றுலா வரும் இந்தியப் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Add new comment

7 + 4 =