இந்தியர்கள் மகிழ்ச்சியாக இல்லை - ஐநா


இந்தாண்டு இந்தியர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் அவை தகவல் வெளியிட்டுள்ளது.

 

கடந்தாண்டை விட இந்தாண்டில் இந்திய மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என ஐ.நாவின் உலக மகிழ்ச்சியை கணக்கிடும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலகளவில் மகிழ்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகையில், மக்களின் வருமானம், சமத்துவம், சமூக ஆதரவு, அரசின் மீதான நம்பிக்கை, ஆயுடக்காலம், சுதந்திரம் ஆகிய பலவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சிக்கான அளவீடுகள் கணக்கிடப்படுகின்றன.

 

இந்த பட்டியலில் இந்தாண்டு இந்தியா 140வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு 133வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

உலகில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ள நாடாக பின்லாந்து இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add new comment

10 + 8 =