இத்தாலி: 3 குழந்தைகள் பெற்றால் இலவச நிலம்


மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு  இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

 

இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தோடு இந்த பதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இத்தாலி உள்ளிட்ட மேலை நாடுகளில் மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான முதியோர்கள் உள்ளனர்.

 

இதன் காரணமாக அந்நாட்டில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்கள் தொகையை உயர்த்தவும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

 

அதன்படி இத்தாலியில் மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு இலவச மகா நிலம் அளிக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

 

கடந்த 2017ம் ஆண்டு பிறப்பு விகிதப்படி இத்தாலியில் கடந்த ஆண்டு 4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016 ஆம் ஆண்டை விட 2 விழுக்காடு குறைவாகும்.

Add new comment

6 + 4 =