இத்தாலி இரவு விடுதில் கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு


இத்தாலியிலுள்ள ஓர் இரவு விடுதியில் கூட்ட நெரிசல் காரணமாக 6 பேர் உயிரிழந்ததாகவும், 100 பேர் காயமடைந்ததில்,  10 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

இத்தாலியின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரான அன்கோனாவிற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

கோரினால்டோ என்ற இடத்தில் இருக்கும் .ந்த இரவு நேர விடுதியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தபோது, பெப்பர் ஸ்ப்ரே அடிக்கப்பட்டதாக யாரோ ஒருவர் கூறியதால் பீதி ஏற்பட்டு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் செய்திகள் உள்ளன.

 

இத்தாலியின் பிரபல ராப் இசை கலைஞர் எபஸ்தா 'தி லன்டேர்னா அஸ்ஸுரா' என்னும் இரவு விடுதியில் நடத்திய நிகழ்ச்சியில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றதாக தெரிகிறது.

 

கிறிஸ்து பிறப்பு விழா தொடர்பான சிறப்பு நாள் கொண்டாட்டத்தின்போது, நள்ளிரவில் சுமார் ஒரு மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Add new comment

10 + 2 =