இணைய விவிலிய பயிற்சி சானலை தொடங்கிய சியோல் உயர் மறைமாவட்டம்


தென் கொரியாவின் சியோல் உயர் மறைமவாட்டம் சிறப்பு விவிலிய பயிற்சி யுடியூப் சானலை தொடங்கியுள்ளது.

 

அதில் வழங்கப்படும் காணொளி உள்ளடக்கங்களை தங்களின் திறன்பேசியில் பார்த்து பலரும் பயன் அடைந்து வருகின்றனர்.

 

சியோல் உயர் மறைமாவட்டத்தின் தகவல் தொடர்பு துறை இணைய விவிலிய சானல் ஒன்றை சியோலின் கர்தினால் ஆன்ட்ரூ யோம் சூ-ஜூங்கின் மேய்ப்புப்பணி ஆலோசனையின்படி தொடங்கியுள்ளது.

 

கடவுளின் வார்த்தைதான் புதிய மறைபரப்பின் உந்து சக்தி என்று இந்த கர்தினால் கூறியுள்ளார்.

 

3 அருட்தந்தையர்கள் யுடியூப்பில் விவிலிய விரிவுரைகளை வழங்கி இந்த விவிலிய பயிற்சியை நடத்தப்படுகிறது.

 

விவிலியத்திலுள்ள பழக்க வழக்கங்கள், விடுதலைப் பயணம், மார்க் நற்செய்தி ஆகியவை பற்றிய 3 விரிவுரைகள் வழங்கப்படுகின்றன.

 

ஒவ்வொரு வாரமும் 6 நிமிட காணொளியாக உள்ளடக்கங்கள் வெளியிடப்படும். குறுகிய காலத்தில் இறைமக்கள் கற்றுக்கொள்ளும் வகையில் இந்த விரிவுரைகள் இருக்கும்.

 

இந்த உள்ளடக்கத்தை குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் புரிந்து கொள்வதுபோல வழங்கப்பட்டு வருகிறது. .

Add new comment

4 + 0 =