இணையத்தில் கேலி கிண்டல்களுக்கு எதிரான வத்திக்கானின் நடவடிக்கை


இணையத்தில் உலா வருகின்ற கேலி மற்றும் கிண்டல்களுக்கு எதிராக சர்வதேச கண்காணிப்பு அமைப்பை வத்திக்கான் உருவாக்கியுள்ளது.

 

“இணையத்தில் கேலி மற்றும் கிணடல்களை நீங்கள் செய்யாமல் இருப்பதோடு, உங்களுடைய பள்ளியில், அக்கம்பக்கத்தில் நிகழ்வதை அனுமதிக்காமல் இருப்பதாக இறைவனிடம் வாக்குறுதி அளியுங்கள். புரிந்ததா?”

 

இதுதான் திருத்தந்தை பிரான்சிஸிடம் இருந்து வந்துள்ள சாதாரணமான செய்தி.

 

இணையத்தில் கேலி மற்றும் கிண்டல் செய்யப்படுவது எந்த அளவுக்கு திருத்தந்தை பிரான்சிஸை கவலைக்குள்ளாக்கியுள்ளது என்பதை, இதற்கு வத்திக்கான் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளதை வைத்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த பிரச்சனையை குழந்தைகள் எப்படி பார்க்கிறார்கள்? அரசு இந்த பிரச்சனையை எவ்வாறு கையாள்கிறது? இவற்றை தடுக்கும் திட்டங்களை நிறுவுவது எப்படி? என மூன்று ஆய்வுகளின் முடிவுகளை ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக வத்திக்கான் தெரிவிக்கிறது.

 

இந்த ஆய்வை நடத்த உதவிய நிறுவனங்களில் கரோலினா பவுண்டோஷனும் ஒன்று. 14 வயதான கரோலினா பிக்ச்சியோ சமூக வலைதளங்களில் கேலிக்கு இலக்காகுவதை தாங்கிகொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பின்னர், இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

Add new comment

1 + 11 =