இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிரிவினை


இதுவரை ஒன்றாக வாழ்ந்து வந்த இங்கிலாந்து அரச குடும்பத்திலும் பிரிவினை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

 

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் அரச குடும்பத்தில் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு பிறந்த மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரி.

 

வில்லியமின் மனைவி கேட் மிடில்டன். ஹாரியின் மனைவி மேகன் மார்கல்.

 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஹாரி- மேகன் திருமணத்தில் பல முக்கிய பிரிட்டன் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

 

ஆனால், இங்கிலாந்து அரச குடும்பத்தில் உருவாகியுள்ள சலசலப்பு, தனிக்குடித்தனம் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இளவரசர்களான வில்லியமும் ஹாரியும் அவரவர் மனைவிகளுடன் கெனிங்டன் அரண்மனையில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

 

திருமணத்திற்கு பிறகு மேகன், கென்சிங்டன் அரண்மனைக்கு வந்ததில் இருந்தே வில்லியமின் மனைவி கேட் மிடில்டனுடன் ஒத்துப்போகவில்லை என கூறப்படுகிறது.

 

இதன் காரணமாக, ஒரே வீட்டில் வசித்து வந்த இளவரசர் வில்லியமும், ஹாரியும் இனி தனித்தனியாக வாழ முடிவு செய்துள்ளனர்.

 

ஹாரி-மேகன் ஜோடிக்கு குழந்தை பிறக்கும் முன்பாகவே அவர்கள் பிராக்மோர் இல்லத்தில் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது.

Add new comment

8 + 8 =