ஆஸ்திரேலியாவில் வெள்ளப்பெருக்கு, ஆயிரக்கணக்கானோர் தவிப்பு


ஆஸ்திரேலியாவின் வட கிழக்கில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு நூற்றாண்டாக இல்லாத  கனமழை பொழிந்துள்ளது.

 

இதனால், சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்காகோர் தவித்து வருகின்றனர்.

 

இன்னும் சில நாட்கள் இந்நிலை தொடரும் என்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டுமென அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் கோடைகாலத்தில் கனமழை பெய்வது வழக்கமாக இருந்தாலும், தற்போதைய மழை இயல்பாக பெய்வதைவிட அதிகமான மழையாகும்.

 

டவுன்ஸ்வில் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். 20 ஆயிரம் வீடுகளை வெள்ளப்பெருக்கு சூழ்ந்துள்ளது. ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்னர்.

Add new comment

7 + 4 =