ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தி சிலை திறப்பு


ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், இந்தியாவின் மகாத்மா காந்தியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சிலையை திறந்து வைத்துள்ளார்.

 

தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்ற இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கொவிந்த், அங்கு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

 

இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தியின், 150வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

 

இதனை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை திறந்து வைத்தார்.

 

இதற்காக நடத்த்ப்பட்ட விழாவில், ஆஸ்திரேலிய தலைமையமைச்சர் ஸ்காட் மோரிசனும், இந்திய வம்சாவளியினர் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

Add new comment

3 + 16 =