ஆர்த்தோடாக்ஸ், ஜகோபைட் மோதல் – மூடப்படும் தேவாலயம்


மன்னாமங்கலத்திலுள்ள புனித மேரி தேவாலயம் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரால் பூட்டப்பட்டுள்ளது.

 

ஆர்த்தோடாக்ஸ் மற்றும் ஜகோபைட் மத பிரிவுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

அருட்தந்தையர், பொது நிலையினர் உள்பட ஜகோபைட் பிரிவினர் இரண்டு நாட்களாக தேவாலயத்திற்குள் இருந்ததால் பிரச்சனை வளர தொடங்கியது.

 

அதே நேரத்தில் ஆர்த்தோடாக்ஸ் பிரிவினர் வெளியே போரடி கொண்டிருந்தனர்.

 

வியாழக்கிழமை நடைபெற்ற கல் எறிதலில் இருதரப்பினர் இடையே பலரும் காயமடைய 5 ஆர்த்தோடாக்ஸ் அருட்தந்தையர் உள்பட 30 பேர் கைது செய்ய்பட்டனர்.

 

இரு தரப்பில் இருந்தும் 120க்கு மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

 

இந்த விடயத்தில் மாவட்ட ஆட்சியர் டி.வி. அனுபமா தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தையில், இரு பிரிவினரும் தேவாலயத்தை விட்டு வெளியேற சம்மதித்ததுடன் இந்த தேவாலயம் பூட்டப்பட்டுள்ளது.  

Add new comment

8 + 6 =