ஆர்எஸ்எஸ் ஒரு தீவிரவாத அமைப்பு - பிரகாஷ் அம்பேத்கர் கருத்து


பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) ஒரு தீவிரவாத அமைப்பு என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறியுள்ளார்.

 

பாரத ரத்னா பாபா சாஹேப் அம்பேத்கரின் பேரான இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் பரிப்பா பகுஜன் மஹாசங் (பிபிஎம்) எனும் அரசியல் கட்சியின் தலைவராக விளங்குகிறார்.

 

மும்பையின் புறநகரான கல்யாண் பகுதியில் நடந்த தம் கட்சிக் கூட்டத்தில் பிரகாஷ் அம்பேத்கர் பேசியபோது இந்த கருத்தை கூறியுள்ளார்.

 

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தங்களுடன் ஆயுதங்களை வைப்பதாகவும் குற்றம் சாட்டிய அவர், அதனை சேர்ந்தோரின் வீடுகளைச் சோதனையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

 

காவல்துறை மற்றும் ராணுவம் நமது நாட்டில் இருக்கும்போது ஆர்எஸ்எஸ் ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் பிரகாஷ் அம்பேத்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சுதந்திரம் எனும் பெயரில் பொதுமக்களை சாதி அடிப்படையில் பிரிக்க இந்த அமைப்பினர் முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

Add new comment

1 + 0 =