ஆயுள் தண்டனையை எதிர்நோக்கும் ஆசியா பீபிக்கு எதிராக போராடியோர்


தீவிர சிந்தனைகளுடைய மதக்குருக்கள் சிலர் மீது பாகிஸ்தான் தேச துரோகம் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.

 

ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்டபோது நிகழ்த்திய பெரும் போராட்டங்களை முன்னிட்டு அவர்கள் தேச துரோகம், பயங்கரவாதம் ஆகிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தெய்வ நிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக தனிமை சிறையில் வாடிய கத்தோலிக்க பெண் ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்ட நிலையில் பெரும் போராட்டங்களை தூண்டிவிட்ட மதக்குருக்கள் இவர்கள்.

 

ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்டவுடன், கடும்போக்கு குழுவான டெக்ரீக்- லாபால்க் பாகிஸ்தானின் அமைப்பின் தலைவர் காடிம் ஹூசேன் ரிஸ்வி பொரியதொரு போராட்டத்தை முன்நின்று நடத்தினார்.

 

3 நாட்களாக நாட்டின் முக்கிய நகரங்கள் முடங்கிபோய், அரசு எழுத்துபூர்வமாக ஒப்பந்தம் செய்ய வேண்டிய கட்டாயமும் அப்போது ஏற்பட்டது.  

 

ஆனால் 3 வாரங்களுக்கு பின்னர், அறிவிக்கப்படாத தேடுதல் வேட்டையில், ரிஸ்வியும், நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது தேச துரோகம் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

 

ஒட்டுமொத்தமாக 2,899 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் செத்திரி லாகூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை அடைந்த ஆசியா பீபி, பாதுகாப்பாக ரகசியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வெளிநாடுகளில் அவருக்கு புகலிடம் அளிப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

Add new comment

17 + 2 =