ஆயிரக்கணக்கானோரை ஈர்த்த மணிலா ஆண்டு நிறைவு மத பேரணி


நாசரேத்தூர் கறுப்பு இயேசுவின் உருவத்தை சுமந்து கொண்டு செல்லும், ஆண்டு நிறைவில் நடைபெறும் நன்றி பேரணியில் மணிலாவின் மத்திய மாவட்டத்திலுள்ள சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

 

ஜனவரி மாதம் 9ம் தேதி கடைபிடிக்கப்படும் நாசரேத்தூர் கறுப்பு இயேசுவின் பெருவிழா கொண்டாட்டத்தின் நவநாளின் (9 நாட்கள் மத அனுசரிப்பு) தொடக்கத்தையும் இந்த ஆண்டு நிகழ்வு குறிக்கிறது.

 

ஆடம்பர கொண்டாட்டமாக அமைவதைவிட இந்த ஆண்டு பேரணி செப உணர்வோடும், ஒழுங்காகவும் நடைபெற்றதாக மணிலாவின் குலாப்போ மாவட்டத்திலுளள “கறுப்பு நசரேன்” சிறிய பசிலிக்காவின் தலைவர் மேதகு ஹெர்னான்டோ கோரோனெல் தெரிவித்துள்ளார்.

 

இந்த பேரணியில் பல இளைஞர்கள் பங்கேற்றனர். இளைஞர்களின் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள 2019இல் ஏற்பட்டுள்ள நேர்மறை அடையாளம் இதுவென அவர் கூறியுள்ளார்.

Add new comment

2 + 0 =