ஆயர் ஒருவர் பணியாளர், இளவரசர் அல்ல - திருத்தந்தை


ஒரு மறைமாவட்டத்தின் ஆயர் தாழ்ச்சியான, சாந்தமான பணியாளர், இளவரசர் அலல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் கூறியுள்ளார்.

 

புனித பவுல் தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில் ஆயர்களின் குணநலன்கள் பற்றி குறிப்படுவதை சாந்தா மரியா தேவாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபோது மறையுரையில் விளக்குகையில் திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

 

திருச்சபையில் ஒழுங்கை கொண்டு வருவதில் ஆயர்களின் பணிகள் பற்றியும் திருத்தந்தை பிரான்சிஸ் விவரித்தார்.

 

திருச்சபை முற்றிலும் ஒழுங்குகளோடு பிறந்து விடுவதில்லை.

மறைமாவட்ட ஆயர்கள் தங்களை இளவரசர்களாக எண்ணிக்கொள்ளாமல், வேலைக்காரர்களாக ஒழுங்குகளை உருவாக்க பாடுபட வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

Add new comment

1 + 4 =