ஆயர்கள் கொல்லப்பட வேண்டும் – பிலிப்பீன்ஸ் அதிபருக்கு எதிராக கருத்து


ஆயர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறிய அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேவை கண்டித்து பிலிப்பீன்ஸின் கத்தோலிக்க ஆயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

கொலைக்கார பைத்தியக்காரர் என்று ஓர் ஆயர் பிலிப்பீன்ஸ் அதிபரை அழைத்துள்ளார்.

 

தலைநகர் மணிலாவில் அதிபர் மாளிகையில் பேசுகையில், 2016ம் ஆண்ட ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இந்த அதிபரின் நிர்வாகத்தை விமர்சனம் செய்வதற்கு கத்தோலிக்க நாடான பிலிப்பீன்ஸிலுள்ள ஆயர்கள் உதவாதவர்கள் என்று ஆயர்களை அவா குற்றஞ்சாட்டினார்.

 

இ்ந்த ஆயாகளை கொல்லுங்கள். இந்த முட்டாள்கள் எந்த நோக்கத்திற்கும் உதவவில்லை. அவர்கள் செய்வதெல்லாம் விமர்சனம் மட்டுமே என்று டுடெர்டே கூறியுள்ளார்.

 

பெரும்பாலான அருட்தந்தையர்கள் ஒருபாலுறவுக்காரர்கள். ஏறக்குறைய 90 சதவீதத்தினர் அவ்வாறு உள்ளனர். அவர்கள் முன்னால் நீங்கள் மண்டியிடாதீர்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

தான் கடவுளை மறுப்பவர் அல்ல என்று தெரிவித்த ரொட்ரிகோ டுடேர்டே, கத்தோலிக்கர்களை போன்றதொரு கடவுளை நான் கொண்டிருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

 

நான் கடவுளை நம்பவில்லை என்று தெரிவிக்கவில்லை. உங்கள் கடவுள் முட்டாள் என்று கூறியுள்ளேன். எனது கடவுளுக்கு பொது அறிவு உண்டு. அதைதான் நான் ஆயர்களிடமும் கூறினேன். நான் கடவுளை நம்பாதவன் என்று சொல்லவேயில்லை என்று அவர் கூறினார்.

 

ஆயர்களை கொல்ல வேண்டும் என்று கூறுகின்ற ஒரு நாட்டின் அதிபர் எவ்வளவு கொடூரமானவராக இருப்பார் என்று பல ஆயர்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

 

அதிபரின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் கவலைகள் அனைத்தும் வெளிவருவதாக தெரிவித்திருக்கும் சோர்சோகென் மறைமாவட்ட  ஆயர் அர்டுரோ பஸ்டஸ், இத்தகைய ஆத்திரமூட்டும் சொற்களை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

 

அதிபர் டுடேர்டே கொலைகார பைத்தியமாக உருவாகிவிட்டதாக இந்த ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

Add new comment

2 + 5 =