ஆயர்களுக்கு இலக்குகளை நிர்ணயிக்கும் திருத்தந்தை


திருச்சபையில் வயதுக்கு வராதோரை பாதுகாப்பது பற்றி நடைபெறயிருக்கும் கூட்டத்தில், துஷ்பிரயோகத்தை தடுக்கவும், பாதிக்க்பபட்டோர் மீது அக்கறை காட்டவும், எந்த வழக்குகளையும் மூடி மறைக்காமல் இருப்பதையும் உலக ஆயர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென திருத்த்நதை பிரான்சிஸ் விரும்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கூட்டம் அறிவார்ந்த ஒன்றாக அல்ல, ஊழியர்களின் பேரவை கூட்டமாக அமைய வேண்டும். செபத்தாலும், இறைவனின் விருப்பத்தை புரிந்து கொள்வதிலும், மறைபோதக மற்றும் பயிலரங்க கூட்டமாக அமைய வேண்டும் என்று வத்திக்கான் ஊடக அலுவலத்தின் தற்காலிக இயக்கநர் அலஸ்சான்ரொ கிசோட்டி தெரிவித்துள்ளார்.

 

பிப்ரவரி 21 முதல் 24ம் தேதி வரை நடைபெறுகின்ற இந்த கூட்டத்திற்கு தெளிவான இலக்கு உள்ளது. உலக அளவில் இருக்கும் வயதுக்கு வராதோர் மீதான பாலியல் து்பிரயோக பிரச்சனையை தடுக்கவும், அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவும் வேண்டுமென கிசோட்டி கூறியுள்ளார்.

 

“இந்த உலக அளவிலான பிரச்சனை உலக அளவிலான பதில் நடவடிக்கையால்தான் தீர்க்க முடியும் என்று திருத்தந்தை அறிந்து வைத்துள்ளார்” என்று கிசோட்டி தெரிவித்திருக்கிறார்.

Add new comment

4 + 7 =