ஆப்கானிஸ்தான் தீவரவாதிகள் தாக்குதலில் 27 சிப்பாய்கள் பலி


ஆப்கானிஸ்தானின்கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ராணுவ முகாமில் இருக்கும் மசூதியை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 சிப்பாய்கள் பலியாகியுள்ளனர்.

 

இந்த 27 சிப்பாய்களும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அங்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

இந்த தாக்குதல் பற்றி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

 

இந்த தாக்குதலை நடத்தியதாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

 

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் தலிபான்கள் அதிக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

 

அவர்களின் வளர்ச்சி பற்றிய கவலை எழந்துள்ள நிலையில், அரசு அதிகாரிகள் எடுத்தள்ள நடவடிக்கைகளை அரசிடம் சமர்பிக்கும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.

 

தலிபான்களின் சமீபத்திய தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.  

Add new comment

2 + 2 =