ஆப்கானிஸ்தான் தங்கச் சுரங்கத்தில் விபத்து – 30 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் பலியாகியதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

 

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் பதக்‌ஷான் மாகாணத்தில் உள்ள கொஹிஸ்தான் பகுதில் தங்கச் சுரங்கத்தில் இந்த விபத்து ஏற்படடுள்ளது.

 

அந்த பகுதியிலுள்ள கிராமத்தினர் 220 அடி ஆழம் சென்று தங்கத்தைத் தேடியபோது ஏற்பட்ட விபத்தில் 30 பேர் பலியாகினர்.

 

ஆப்கானிஸ்தானிலுள்ள ஏராளமான கனிம வளங்கள் நிறைந்த சுரங்கங்கள்  பாதுகாப்பற்ற நிலையிலும், போதிய பராமரிப்பு இல்லாத நிலையிலும் இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Add new comment

2 + 9 =