ஆந்திராவிலும் தனித்து போட்டியிடும் காங்கிரஸ்


ஆந்திர மாநிலத்தில் வரயிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து்ள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடாது என்று அந்த கட்சி அறிவித்துள்ளது.

 

பாஜவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்திக்க இருக்கும் நிலையில் மாநிய காங்கிர் கட்சியினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

 

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த தெலுங்குதேசம் கட்சி கடந்த ஆண்டு பிரிந்து எதிராகச் செயல்பட்டு வருகிறது.

 

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன், சேர்ந்து தெலுங்குதேசம் கட்சி போட்டியிட்டது.

 

முன்னதாக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் உத்தர பிரதேசத்தில் கூட்டணி அமைத்து கொண்டதால், காங்கிரஸ் தனியாக போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், ஆந்திராவில் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சியினரே அறிவித்துள்ளனர்.

Add new comment

11 + 0 =