ஆட்கடத்தல் அதிகரிப்பு – ஐநா அறிக்கை


மனிதர்களைக் கடத்துவது உலக நாடுகள் அனைத்திலும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

 

மனிதக் கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக, ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் அவர்களுடைய பொருளாதாரத் தேவைகளுக்காக பெண்களையும், குழந்தைகளையும் கடத்துகின்றனர்.

 

மேலும் உடல் உறுப்புகளைத் திருடுவதற்காக ஆட்கள் கடத்த ப்படுகின்றனர். இவ்வாறு கடத்தப்படுபவர்களில் இதில் 70 சதவீத பேர் பெண்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 2018 ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.  

 

இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் பின்னர், பாலியல் துன்புறுத்தல், வேலை, பிச்சை எடுத்தல் ஆகியவற்றில் தளள்ப்படுகின்றனர்.

 

2003 முதல் 2016ம் ஆண்டு வரை சுமார் 2 லட்சத்துக்கு அதிகமான சம்பவங்களை ஐக்கிய நாடுகள் சபை பதிவு செய்துள்ளது.

 

கடத்தல் சம்பவங்களுக்கு எதிராகப் போதிய நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதால், அவை அதிகரித்து வருகின்றன.

 

கடந்த 7 ஆண்டுகளில் ஆட்கடத்தல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

 

2016-ம் ஆண்டு மட்டும் கடத்த 13 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக ஐநாவின் இந்த அறிக்கை கூறுகிறது.

Add new comment

4 + 2 =